Saturday, May 10, 2008

Tuesday, July 24, 2007

Mantra to Remove Karma

Entering into Timeless Mind and Manifestation

மகா மந்திரம் (The Greatest Mantra)

அமெரிக்காவிலிருந்து முருகன்,வள்ளலார்,வசிஷ்டர்,சித்தர்கள்,மந்திரங்கள்,தியானம்,சோதிடம்,என பலவகையான தனது படைப்புக்களை தூய தமிழிலும் ஆங்கிலத்திலும் "You Tube" ல் தவழ விட்டுள்ளார் Dattatreya SivaBaba உங்கள் பார்வைக்கு சில:

பெற்றவளை குப்பையில் எறிந்த குணக்குன்று

கடந்த வெள்ளிக்கிழமை(20/07/2007) டொரன்ரோ கனடாவில் வெளிவந்த National Post பத்திரிகையில் "Ailing 75-year-old grandmother dumped from home into garbage" என்ற தலைப்பில் பின்வரும் செய்தியை வாசிக்க நேர்ந்தது:
சின்னம்மாள் பழணியப்பன் என்ற ஈரோட்டைச்சேர்ந்த 75 வயது மூதாட்டி அவரின் மகளின் உத்தரவின்படி பேரப்பிள்ளைகளால் வீட்டிலிருந்து
தூக்கிவரப்பட்டு குப்பைக்குள் வீசியெறியப்பட்டதாகவும், குப்பைக்குள்
முனகல்ச்சத்தம் கேட்டு சிலரால் காப்பாற்றப்பட்டதாகவும், மகளிடம்
போகவே விரும்புவதாகவும் ஆனால் சரியான முகவரியை அவரால் கூறமுடியாமலிருப்பதால் அதிகாரிகள் தடுமாறுகிறார்கள்,
எனவும் அச்செய்தி தேரிவிக்கிறது.
மாதா, பிதா, குரு, தெய்வம் என தாய்தந்தையர்களை வணங்குதலுக்கும்
மரியாதைக்கும் முன்னிலைப்படுத்திய எமது கலாச்சாரத்தில் அதுவும்
பெரியாரின் மண்ணிலா இந்தக்கொடுமை?
சீதனக்கொடுமைக்கும், ஈவ்டீசிங்கிற்கும் சட்டங்களும் தண்டனைகளுமுள்ள
அரசமைப்பில் முதியபிரஜைகள் பராமரிப்புக்கும் பாதுகாப்பிற்கும் முக்கிய கவனமெடுத்தல் அவசியம்.

Tuesday, April 3, 2007

மூர்த்தி வீதி தையிட்டி

காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை, வெளிச்சவீடு, புகையிரதநிலையம், வாசிகசாலை, துறைமுகம்,மாவிட்டபுரம் கந்தசாமி கோவில்,ஊறணி, ஆவலைச்சந்தி, மயிலிட்டி, பலாலி, சாந்தகச்சந்தி, சனிட்டொரியம், டச்சு வீதி, மற்றும் இவைக்குட்பட்ட ஆயிரக்கணக்காண குடிமனைகள், காணிகள், தோட்டங்கள், கோவில்கள், சர்ச்சுகள், சனசமுகக்கூடங்கள், பாடசாலைகள், மைதானங்கள், தியெட்டர்கள், அழகிய கடற்கரை, மற்றும் பலவனவும் இங்கு வாழ்ந்து போர் காரணமாக போட்டது போட்டபடியிறுக்க அவசர அவரசமாய் குடிபெயர்ந்த மக்கள் மறந்து போயிருப்பார்களோ தெரியவில்லை.

இது நடந்தது 1990 மே மாதம்,பதினெழு ஆண்டுகளாகிவிட்டன, இந்தா சண்டை முடியப்போகுது இதோ ஊர் போகிறோம் என்று தற்காலிகமாய் பலவிடங்கலில் தங்கியிருந்தவர்கள் மேலும் குடிபெயர்ந்து புலம்பெயர்ந்து எங்கெங்கோ சென்று விட்டார்கள், பலர் எங்கு வாழ்கிறார்களோ தெரியவில்லை,எனது தாய்தந்தையரும் பல அவர்களையொத்த
வயதினரும் தாம் பிறந்து வாழ்ந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்வோமா என்ற தீராத ஏக்கங்களுடன் இறைவணடி ஏகிவிட்டார்கள்,எஞ்சிய முதியவர்களும் அதே ஏக்கங்களுடன் வாழுகிறார்கள்.

ஏனையோர் தாம் வாழ்ந்த வாழ்க்கை, வாழ்விடங்கள், சொத்துக்கள், சேகரித்தவைகள், உறவுகள், சமுக/சமய பங்களிப்புகள் என்பனவற்றை இழந்து வாழ்வாதாரங்கள் தேடி உலகெங்கும் பரந்து வாழ்கிறார்கள்தான் ஆனால் இந்தப்பதினேழு ஆண்டுகளில் தம் வாழ்விடங்கலுக்கு சென்று பார்த்துவரக்கூட அனுமதி மறுக்கப்பட்டவர்களாய்த்தான் வாழ்கிறார்கள்.

"மூர்த்தி வீதி தையிட்டி" இப்பெருங்குடிபெயர்வில் தொலைந்துவிட்ட ஒரு முகவரி, எதிர்காலம் "அதியுயர் பாதுகாப்பு வலயம்" என்ற போர்வையில் இம் முகவரியை நிரந்தரமாய் அழித்துவிடுமா? அல்லது திரும்பவும் பதியப்படுமா? யாரரிவாரோ?